அதற்குள் OTT-யில் வெளியாகும் லக்கி பாஸ்கர்?
துல்கர் சல்மானின் புதிய படமான ''லக்கி பாஸ்கர்'', பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார நாட்களில் கூட நல்ல தியேட்டர்களில் நல்ல கூட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ''நெட்ஃபிக்ஸ்'' பெற்றுள்ளதாகவும், இம்மாதம் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனவும் திரையுலக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இப்பொது தகவல்கள் பரவி வருகின்றன. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
பங்குச் சந்தை வர்த்தகத்தை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான், வங்கி ஊழியராக நடித்திருக்கிறார்.