பிரேக் அப் கதையா ? நேசிப்பாயா?

 நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியும் ஆன ஆகாஷ் முரளி, ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்லின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷ்ணுவர்தன் எழுதி இயக்கியுள்ளார்.

அட்வென்ச்சர் காதல் கதையாக படம் உருவாகியுள்ளது. ஆகாஷ் முரளி திறமையான நடிகர். காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிக்க இருப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக கதை இருக்கும். போர்ச்சுகல், ஸ்பெயின், பெங்களூரு, சென்னை ஆகிய பகுதிகளில் படபப்பிடிப்பு நடந்துள்ளது. ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கின்றனர். திடீரென்று ஒரு காரணத்தால் அவர்கள் பிரிந்துவிடுகின்றனர். அதற்குப் பிறகுதான் அவர்கள் தங்கள் செயலையும், காதலையும் நினைத்துப் பார்க்கின்றனர். மீண்டும் அவர்கள் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

இங்கிருந்து செல்பவர்கள், மொழி தெரியாத போர்ச்சுகல் நாட்டில் சிக்கிக்கொள்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ். கதை ஓட்டத்தை வேறெந்த கோணத்திலும் மாற்றக்கூடாது என்பதற்காக, மறைந்த முரளியின் காட்சிகளை வைக்கவில்லை. அதுபோல், ஆகாஷ் முரளியின் அண்ணன் அதர்வா முரளியையும் நடிக்க வைக்கவில்லை. காதலர்களுக்கு இடையே பிரேக்அப் ஆன பிறகு படத்தின் கதை தொடங்குகிறது. வரும் டிசம்பரில் படம் ரிலீசாகிறது. மீண்டும் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url