நடிகர் மகன் நடிகன் ஆக கூடாதா: விஜய் சேதுபதி மகன்

 மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தற்போது ''பீனிக்ஸ்'' என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜைக்கு ஏன் அப்பா (விஜய் சேதுபதி) வரவில்லை என்று அப்போது கேட்டதற்கு, ‘நான் வேற அப்பா வேற. அதனால்தான் சூர்யா சேதுபதினு போடாம சூர்யானு’ போட்ருக்காங்க என்றார். அந்தப் பேச்சை பார்த்த பலரும் வயதுக்கு மீறிய பேச்சு என்று விமர்சனம் செய்தனர். ஆனால் டீசர் வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது ஏன் அப்பாவை அழைத்து வந்தீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, தந்தையர் தினத்துக்காக அழைத்து வந்தேன் என்று கூறி சமாளித்தார்.

தற்போது ட்ரோல்களை மீண்டும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் சூர்யா.  சமீபத்தில் பேசிய அவர், ‘டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம். போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம். நடிகரின் மகன் மட்டும் நடிகராகக்கூடாதா’ என்று கேள்வி எழுப்பினார். அதனை கவனித்த நெட்டிசன்ஸ், ‘என்ன நெப்போட்டிசத்துக்கு ஏகத்துக்கும் சப்போர்ட் செய்கிறாரே சூர்யா. இப்போதெல்லாம் டாக்டர் மகன் டாக்டர் ஆவதற்குக்கூட ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் நடிகர் மகன் நடிகர் ஆவதுதான் ஈஸி. அதை புரிந்துகொள்ளாமல் இஷ்டத்துக்கு பேசுகிறாரே’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad