சோகத்தில் கங்கனா ரனவுத்!

 


பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனாவின் தாய்வழி பாட்டியான இந்திராணி தாக்கூர் (100), கடந்த சில நாட்களாக மூளை பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். இதுகுறித்து தனது கவலையை பகிர்ந்துள்ள கங்கனா, ‘மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. எனது பாட்டி ஒரு அசாதாரண பெண்;

அவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். பொருளாதார பின்னணி சொல்லும்படியாக இல்லாவிட்டாலும், தனது 5 குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார். தனது திருமணமான மகள்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்க உதவினார். இது அந்த காலகட்டத்தில் அவர் செய்து பெரிய சாதனையாக இருந்தது’ என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url