நயன்தாரா போல நெருக்கடியில் இன்னோரு நடிகை

 நயன்தாராவை போலவே தனக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டதாக, பார்வதி திருவோத்து பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியிருப்பது வருமாறு: சுற்றியிருப்பவர் களின் ஆதரவு கிடைக்காதபோது மனநிலை எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், அதுகுறித்து ஆதரவு அளிக்கவும் நீண்ட நேரம் தேவை இல்லை.

நயன்தாராவின் பதிவைப் பார்த்தவுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதாலேயே பகிர்ந்தேன். அவர் சுயமாக வளர்ந்தவர். தனது கேரியரை தானே உருவாக்கிக்கொண்ட லேடி சூப்பர் ஸ்டாரே இப்படி ஒரு பகிரங்க கடிதத்தை காரணம் இல்லாமல் எழுத வாய்ப்பு இல்லை. அவரைப் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் எதிர்கொண்ட அனுபவங்களை 3 பக்கங்கள் எழுதியுள்ளார். அதனால்தான் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நயன்தாராவுக்கு ஆதரவாக பேசுவேன். ஆதரவு கிடைக்காமல் தவிப்பது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். நான் அதை கடந்து வந்திருக்கிறேன். ஆதரவு ஒருவரை எப்படி மாற்றும் என்பதையும் அறிவேன். அந்த வகையில் யோசித்துப் பார்த்தால், ஆதரவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும், குறிப்பாக, அவர்கள் பெண்களாக இருந்தால், கண்டிப்பாக அவர்களுக்காக நான் துணை நிற்பேன்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url