நம்ம அனுஷ்காவா இது? வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

 நடிகை அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ் பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரங்களுடன் பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url