ஒர்க் அவுட் ஆகாத பிளாஷ்பேக், ஏற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் மழை பொழிந்த ''லியோ'' திரைப்படம், ஜெய்லரின் வசூலை லியோ முறியடித்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. எனினும் படத்தின் பிளாஷ்பேக் போர்ஷன் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லோகேஷ் கனகராஜிடம் பிளாஷ்பேக் காட்சிகள் குறித்து பேச முயற்சித்த போது போனை கட் செய்து விட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் லியோ பிளாஷ்பேக் சர்ச்சைக்கு மீண்டும் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
பலர் என்னிடம் ''லியோ 2'' வருமா என கேட்கின்றனர். இன்ட்ரோ, ஹைனாவுடன் சண்டை காட்சி, காஃபி ஷாப் சண்டை காட்சி, இடைவேளை, கிளைமேக்ஸ் சண்டை, எல்சியு கனெக்ட் என பிளாஷ்பேக் காட்சிகளை தவிர்த்து லியோ படம் மக்களுக்கு பிடித்திருந்ததாக லோகேஷ் கனகராஜ் கூறினார். பிளாஷ்பேக் காட்சிகள் மக்களால் ரசிக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால், மக்களிடம் அது சரியாக போகவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், 20% பிளாஷ்பேக் காட்சிகளால் படம் பிளாஸ்பஸ்டர் ஆவதை தடுத்துவிடவில்லை; நிச்சயமாக எனது அடுத்த படங்களில் இப்படி செய்யமாட்டேன் என லோகேஷ் கூறினார். இன்னும் அதிக கவனத்துடன் பணி செய்வேன். பிளாஷ்பேக் காட்சிகளில் குற்றம் ஒன்றுமில்லை எனவும் குறைவான நேரத்தில் லியோ கதாபாத்திரத்திற்கு இம்பாக்ட் கொடுக்கவே அந்த காட்சிகளை வைத்ததாகவும் லோகேஷ் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த்தை வைத்து தற்போது லோகேஷ் கனகராஜ் ''கூலி'' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பிறகு கைதி 2, ரோலெக்ஸ், விக்ரம் 2 படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அரசியலுக்கு சென்றுவிட்ட விஜய் வாய்ப்பு அளித்தால் லியோ 2 எல்சியு-வை நிறைவு செய்யும் வகையில் எடுக்கப்படும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.