மீண்டும் இணையும் '‘டாக்டர்'’ கூட்டணி?

சிவகார்த்திகேயன் மும்பையில் ‘அமரன்’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது ‘டாக்டர்’ கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், “அடுத்து பெரிய படமொன்றை இயக்கவுள்ளார் நெல்சன். அதற்குப் பின் இணைய வாய்ப்பு இருக்கிறது. எப்போதுமே இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசி வருகிறோம். அனைவருக்குமே ‘டாக்டர்’ படம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு இணையாக அடுத்த படம் இருக்க வேண்டும். எனக்காக கதை தயார் செய்தால், உடனே அழைப்பார். நானும் தயாராகவே இருக்கிறேன். நான், ராஜ்குமார் பெரியசாமி, நெல்சன் அனைவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவானது. தமிழகத்தில் மாபெரும் வரவேற்பை அப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url