வன்மம் & தனிமனித தாக்குதல்: தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
''திரைப்பட விமர்சனம்'' என்ற பெயரில் ''தனிமனித தாக்குதல்'' மற்றும் ''வன்மத்தை விதைத்தலுக்கு'' தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளதாவது;
“திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.