வாய்ப்புக்கு ஏங்கும் நித்யா மேனன்!
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடிக்கும் நித்யா மேனன், தனுஷ் ஜோடியாக நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது மீண்டும் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ என்ற படத்தில் நடிக்கும் அவர், ‘மிஷன் மங்கள்’ என்ற படத்துக்குப் பிறகு இந்தியில் நடிக்கவில்லை. இதுபற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘தனுஷ் என்னிடம் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் கதையை முழுமையாக சொல்லவில்லை. இது எந்த மாதிரி படம் என்பதை போனில் 15 நிமிடங்கள் மட்டுமே சொன்னார்.
ஹீரோயிசம் நிறைந்த ஆக்ஷன் படங்கள் வரவேற்பு பெற்று வந்த நேரத்தில், ‘திருச்சிற்றம்பலம்’ ஒரு இனிமையான படமாக இருந்தது. மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த சோகமான, அதிக மனச்சோர்வு கொண்ட கேரக்டரில்தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த கேரக்டரின் மூலமும் நிரூபிக்க முடியும். இந்தியில் ‘மிஷன் மங்கள்’ என்ற படத்துக்குப் பிறகு புதுப்பட வாய்ப்பு வரவில்லை. நான் எல்லா மொழியிலும் நடிக்க விரும்புகிறேன். தேசிய விருது பெற்றதன் மூலம், இந்தியில் இருந்து வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றார்.