நமக்கு-ல அது செட் ஆகாதுங்க! நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

 மலையாள ‘ஹலோ மம்மி’ திரைப்படத்தின் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் குறித்த தனது கருத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார். ''திருமணம்'' என்ற விஷயத்தில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையே இல்லை. 8, 10, 25 வயதுகளில் கூட, திருமணம் என்பது எனக்கு ஒரு கனவு போன்றதாகவே இருந்தது. குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்வதை நான் பலமுறை கற்பனை செய்திருந்தேன். ஆனால், நான் வளர்ந்த பிறகுதான் என் பார்வை அடியோடு மாறிவிட்டது. என்னைச்சுற்றி இருந்த திருமணமானவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இல்லை.

திருமணமான ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனக்கு இப்போது 34 வயதாகிறது. நான் பார்த்த ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறது. அவர்களும் மலையாளிகள் அல்ல. மற்றவர்கள் எல்லாரும் சமரசம் செய்துகொண்டு வாழ்வதை நான் பார்க்கிறேன். அப்போதுதான் ''திருமணம்'' என்பது எனக்கானது இல்லை என்ற ஒரு புரிதலும், விழிப்புணர்வும் எனக்கு ஏற்பட்டது. இதற்கு முன்னதாக என் அம்மாவிடம், ஒரு மேட்ரிமோனி கணக்கை தொடங்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். நான் மேட்ரிமோனி இணையதளத்திலும் இருந்தேன். ஆனால், அது போலி கணக்கு என்று மக்களும், ரசிகர் களும் நினைத்துக்கொண்டனர் என கூறி உள்ளார். 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad