சமந்தாவுக்கு நோ சொல்லும் பிரபாஸ்!

 தொடர்ந்து சமந்தாவுடன் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க மறுத்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இருவரும் பல வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் இதுவரை இவர்கள் சினிமாவில் சேர்ந்து நடித்ததே இல்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. பிரபாஸ் இது வரை தமன்னா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே, போன்ற பல நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவரும் சமந்தாவும் இதுவரை ஒரே படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. இவர்களின் ரசிகர்கள் கூட அவர்கள் ஒரே படத்தில் நடிப்பதை எதிர்பார்த்து வருகின்றனர். பிரபாஸ், சமந்தாவுடன் நடிக்காததற்குக் காரணம், இருவருக்கிடையிலான உயரப் பிரச்சனை என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

பிரபாஸ் 6.2 அடி உயரம், சமந்தா 5.2 அடி உயரம் மட்டுமே என்பதால் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தால் இந்த உயர வித்தியாசம் தெளிவாகத் தெரியும் என்பதால்தான் பிரபாஸ் இது வரை சமந்தாவுடன் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்துக்கு பிறகு ''சாஹோ'' படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இதில் இயக்குனரின் விருப்பமாக சமந்தா நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரபாஸ் மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. தனக்கு ஜோடியாக நடிப்பவர் தனது உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என பிரபாஸ் நினைப்பதாக கூறுகிறார்கள். 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad