இசையமைப்பாளருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு!

 மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கை கதையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படம், ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வெறும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் ₹200 கோடி வரை வசூலை நெருங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘ஹே மின்னலே’ உள்ளிட்ட சில பாடல்கள் பெரிதான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்  வாட்ச் ஒன்றை சிவகார்த்திகேயன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், 'அமரன் படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்காக நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url