பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்?
ஸ்பெயினிலுள்ள பண்ணையில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ், வேலை பார்த்து வருகிறார். 3 மாதம் 4 மாதம் என வெளிநாடுகளில் இருப்பார். மற்ற நடிகர்களைப் போல் ஜாலியாக டூர் கொண்டாட அவர் அங்கு போவதில்லை. மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாசாராம், மக்களை அறிந்துகொள்ள வழிப்போக்கன் போல் அவர் அந்நாடுகளுக்கு செல்கிறார்.
அங்கு சென்றதும் அங்குள்ள மக்களை சந்திப்பார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். இரவாகிவிட்டால், சாலையோரம் படுத்து தூங்குவார். பிறகு நாடு திரும்பியதும், மற்ற நடிகர்களைப் போல், படப்பிடிப்பில் பங்கேற்பார். இவர் வழிப்போக்கனாக மாறிவிட்டால், இந்தியாவிலிருந்து யாரும் இவரை தொடர்புகொள்ளவே முடியாது. இப்போது அவர் ஸ்பெயினில் ஒரு ஊரில் மிருகங்களுக்கான பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்.
இதற்காக சம்பளம் எதுவும் பெறாத அவர், உணவு, இருப்பிடம் மட்டும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார். அங்குள்ள ஆடு, மாடுகள், குதிரைகள் ஆகியவற்றை அவர் பராமரித்து வருகிறார். இது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா கூறும்போது, ‘பயணம் முடிந்து வந்த பிறகு அந்த அனுபவங்களை என்னிடம் பிரணவ் சொல்லுவான். அவன் இதுபோல் இருப்பது அவனுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவனை எதுவும் சொல்லாதே என அவர் (மோகன்லால்) சொல்லிவிட்டார்.