கேரளாவை அதிரவைத்த ரோலெக்ஸ்! குவிந்த ரசிகர் பட்டாளம்!

 கங்குவா திரைப்படம் நவம்பர் 11-ஆம்  தேதி வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா பட ப்ரோமோஷன் வேலைகளுக்காக கேரளா சென்றுள்ளார். போகும் இடமெல்லாம் அவருக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் பிரமாண்டமாக கேரளா ரசிகர்கள் அளித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவின் ''கங்குவா'' திரைப்படம் நேரடியாக தியேட்டரில் ரீலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இப்படம் 3D தொழிநுட்பத்தில் வெளியாக இருக்கிறது. லுலு மால், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் ரசிகர்களுடன் உரையாடிய சூர்யாவிற்கு கேரளா ரசிகர்கள் அன்பு மழை பொழிந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url