''தல'' அஜித் சொன்ன பாடம்: சிவகார்த்திகேயன்
சமீபத்தில் சிவகார்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் ‘அமரன்’ படத்தை 250, 300 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்பதற்காக உருவாக்கவில்லை. கதையும், கேரக்டரும், தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் நன்றாக இருந்ததால் மட்டுமே நடித்தேன். மேலும், 300 கோடி, 400 கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என்பதற்காக நடிக்க மாட்டேன். ஆனால், மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
மேலும், நடிகர் அஜித்குமார் சாரிடம் இருந்து வாழ்க்கை சம்பந்தப்பட்ட நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரிடம் இருந்து கிடைக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்கள் வேறு யாரிடமும் கிடைக்காது. வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் அவர் தெளிவாகச் சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவருடனான சந்திப்புகள் எனக்கு அதிக தன்னம்பிக்கை தருகிறது.