மீண்டும் இணையும் திருச்சிற்றம்பலம் ஜோடி??
திருச்சிற்றம்பலம் (2022) படத்திற்குப் பிறகு நித்யா மேனனும், தனுஷும் மீண்டும் இணைந்து பணிபுரிய இருக்கின்றனர்.
தனுஷின் நான்காவது இயக்கத்தில் ''இட்லி கடை'' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குரியக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நடிகராக தனுஷிஷுக்கு இது 52வது படமாகவும், இயக்குனராக நான்காவது படமாகவும் அமையவுள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது, இட்லி கடை திரைப்படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அருண் விஜய் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.