கீழே விழுந்த விஜய் தேவரகொண்டா.... பரபரப்பில் படக்குழு...

 நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பையில் உள்ள கல்லூரியில் நடந்த கலாச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை வந்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா சமீபத்தில் தனது நடிப்பில் வெளியாக இருக்கும் ''சாஹிபா'' பாடலை விளம்பரப்படுத்த மும்பை கல்லூரிக்கு சென்றார். இந்தநிலையில் துரதிர்ஷ்டவசமாக, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். அவரது பாடல் குழு உறுப்பினர்கள் விரைவாக கேமராக்களை மூடி, அந்த இடத்தில் இருந்த புகைப்படக் கலைஞர்களிடம், அந்தத் தருணத்தைப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இருந்தபோதிலும், அவர் தடுக்கி விழுந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url