இதுதான் ''பரமன்'' திரைப்படத்தின் கதையா!

 இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜே.சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் '‘பரமன்’' விவசாயிகளின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்கிறார். வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி, இசை. சிபி சதாசிவம், ஒளிப்பதிவு. படத்தொகுப்பு, இயக்குநர் சபரிஷ். கதை, இதய நிலவன்.

தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார். வரும் 29ம் தேதி படம் வெளியாகிறது. இதுகுறித்து இயக்குநர் ஜே.சபரிஷ் கூறும்போது, ‘விவசாயத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள படம் என்பதால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல ஜாம்பவான் இயக்குனர்கள் படம் பார்த்துவிட்டு படத்தை சிலாகித்து பாரட்டினார்கள்’ என்றார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url