குதூகலத்தில் மிருணாள் தாக்குர்!

 நடிகை  மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபகாலமாக தனக்காகக் கதைகள் எழுதப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சீதாராமம், ஹாய் நன்னா படங்களுக்குப் பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்தப் படங்கள் என் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அதனால் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அவர்களைக் கவரும் வகையிலான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்ன்.

இப்போது எனக்காக கதைகள் உருவாகுவதை நினைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் எனது பயணம் ஏணியில் ஏறுவது போலதான். ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருக்கிறேன். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்குள் அடங்கிவிடாமல் மலையாளம், பஞ்சாபி உட்பட பல்வேறு மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். பிரெஞ்சு, ஸ்பானிஷ் படங்கள் என்றால் கூட ஏற்பேன். இவ்வாறு மிருணாள் தாக்குர் கூறியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url