வில்லனாக களம் இறங்கும் ஜெயம் ரவி?
இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்து ‘புறநானூறு’ என்ற படத்தை எழுதி இயக்க இருக்கிறார். இந்நிலையில், அப்படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து ‘டான்’ சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனது 25வது படமாக ‘புறநானூறு’ படத்தில் நடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படமாகும். இதில் வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஒருவரும் நடிக்க முன்வரவில்லை. இந்நிலையில், கதை கேட்ட ஜெயம் ரவி, தனது வேடத்துக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும், இதில் நடிப்பது சவாலாக இருக்கும் என்றும் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார்.