''அச்சச்சோ'' ராசி கன்னாவிற்கே பிரேக் அப் ஆ?
பிரேக் அப் ஆனதால் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார் ராசி கன்னா. தெலுங்கில் ‘தெலுசு கடா’ படத்தில் சித்துவுடன் நடிக்கும் ராசி கன்னா, இந்தியில் ‘ஃபர்ஸி 2’ வெப்சீரிஸில் நடித்து வருகிறார். தனது காதல் முறிவு குறித்து அவர் கூறியது: கடந்த இரண்டரை வருடமாக நான் காதலில் இருந்தேன். அந்த நபர், சினிமா தொழிலை சேர்ந்தவர் கிடையாது. எனது காதல் விவகாரம் யாருக்கும் தெரியாது. எனது நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்.
கருத்து வேறுபாடால் அவர் பிரிந்துவிட்டார். இதனால் நான் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். இதிலிருந்து முழுமையாக விடுபட்டு வருவேன் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது. ஆனால் தற்போது நான் கடந்து வரும் காலகட்டம்தான் எனது வாழ்க்கையின் மோசமான காலமாக நினைக்கிறேன். இதை கடந்துவிட்டால் முழுமையாக நான் என்னை தயார் செய்துகொண்டு தைரியமாக இருப்பேன்.
இந்த விஷயத்தில் எனது பெற்றோர் எனக்கு பக்க பலமாக இருப்பது பெரும் ஆறுதலாக இருக்கிறது. இந்த நேரத்தில் எனது சினிமா வேலையில் முழு கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் வழக்கமாக நான் செலுத்தும் அக்கறையை விட கூடுதல் அக்கறை செலுத்தி படங்களில் நடிக்கப்போகிறேன். இவ்வாறு ராசி கன்னா கூறினார்.