இந்த வார ஸ்டார்: சிவப்பு நிறத்தழகி - நடிகை தமன்னா
வாரம் ஒரு நடிகை அல்லது நடிகரின் சீரிஸில், அவர்களின் திரைப்படம் மற்றும் சாதனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வாரம் பேன் இந்திய ஸ்டாரான தமன்னா குறித்த செய்திகளை பார்க்கலாம். தமன்னா பாட்டியா, இன்று இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். அவரது அசத்தலான தோற்றம், சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றால், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உட்பட பல திரைப்படத் தொழில்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவரது பயணம், சாதனைகள் போன்றவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
மும்பையில் டிசம்பர் 21, 1989 பிறந்த தமன்னா, ஆரம்பகாலதில் கலைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தனது இளம் வயதிலேயே தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார், 2005-இல் ''சந்த் சா ரோஷன் செஹ்ரா'' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பாலிவுட்டில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
இந்த நிலையில் 15 வயதில், தமன்னா தென்னிந்திய சினிமாவுக்ககுள், ஸ்ரீ (2005) மற்றும் கேடி (2006) படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், அவர் நடித்த கல்லூரி (2007) திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இது தமன்னாவிற்கு பின்னாளில் அடித்தளமாக அமைந்தது.
தமன்னாவின் திரையுலக திருப்புமுனை 2009 -ஆம் ஆண்டில் ''கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்'' தெலுங்கு படத்தின் மூலம் வந்தது. அதைத் தொடர்ந்து ''அயன்'' மற்றும் ''பையா'' போன்ற தமிழ் பிளாக்பஸ்டர்கள். இந்த படங்கள் இரண்டு துறைகளிலும் அவரது நிலையை உறுதிப்படுத்தியது, மேலும், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவராக அவரை மாற்றியது. அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடனான அவரது கெமிஸ்ட்ரி அவரது வெற்றிக்கு கணிசமாக பங்களித்தது.
எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான ''பாகுபலி'' திரைப்பட தொடரில் தமன்னாவின் திரைவாழ்க்கை விரிவடைந்தது, ஆல் இந்தியா முதல் உலகமெங்கும் அவருக்கு இப்படம் ரசிகர்களை பெற்று தந்தது. பாகுபலி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது. தமன்னாவின் அவந்திகாவின் கதாபாத்திரம் ஒரு நடிகையாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியது, ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரமாக ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது.
மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடந்திருக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது ஒரு பட பாடல்களுக்கும் ஆடி வருகிறார். ஜெயிலர் கவலையா தொடங்கி ஆஜ் கீ ராத் என இவரின் நடன பாடல்களும் ஒவ்வொரு முறையும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இத்தனை வருடங்கள் கடந்தும் தமன்னா திரையுலகில் முன்னணி நடிகையாக இப்போதும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.