பொங்கலுக்கு வெளியாகும் பாலாவின் ''வணங்கான்''
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம், ‘வணங்கான்’. இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ள அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், சாயாதேவி நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்து வருகிறார்.
இப்படத்துக்கு சென்சார் போர்டில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று அருண் விஜய்யின் 46வது பிறந்தநாளையொட்டி ‘வணங்கான்’ படக்குழுவினர் தற்போது ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘வணங்கான்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.