அதிருப்தியில் ரஜினி ? அப்படி என்ன பிரச்னை?

 ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ''வேட்டையன்''. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தின் போது ரஜினிக்கும் லைகா நிறுவனத்திற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. ஞானவேல் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளியானது. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொறுத்தவரை வெற்றிப்படமாகவே அமைந்தது.

ரஜினியின் ஸ்டைலில் வேட்டையன் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் சற்று ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ஞானவேலின் ஸ்டைலில் இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வேட்டையன் திருப்திகரமான படமாக அமைந்தது. ரஜினியின் வழக்கமான பன்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள் இப்படத்தில் இல்லை என்றாலும் அழுத்தமான கதையில் ரஜினி நடித்திருந்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url