ஒரே படத்தில் 3 பிரபல இயக்குநர்கள்!

 ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, அடுத்த படமாக இயக்கவிருக்கும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர்.

தற்போது இந்த திரைப்படத்தில் 3 இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே குமார்’ என்ற கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனன், ‘பரசுராம்’ என்ற கேரக்டரில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர். இதைப் படக்குழு அறிவித்துள்ளது

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url