''கிளாடியேட்டர் 2'' எப்போ ரிலீஸ் தெரியுமா?
இன்றுவரையிலும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம், ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளிவந்த ‘கிளாடியேட்டர்’. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் தொடர் தொடங்கி நம் ‘பாகுபலி’ வரையிலும் ‘கிளாடியேட்டர்’ திரைப்படத்தின் தாக்கத்தை உணரலாம். 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளாடியேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரிட்லி ஸ்கார் உருவாக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது.