''இயற்கை'' திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு!

 


அறிமுக படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களில் எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். 2003ல் இவர் இயக்கிய இயற்கை திரைப்படம் காதலர்கள் மற்றும் ஒரு தலை காதலர்கள் மத்தியில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை யாராலும் மறக்கமுடியாது. இப்போது இயற்கை படத்தை பார்த்தால் கூட கடல் சார்ந்த வாழ்வியலையொட்டி எடுக்கப்பட்ட ஒரு மாலுமியின் காதலை உணர முடியும். வெள்ளை இரவுகள் என்ற சிறுகதையை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயற்கை படத்தை இயக்கினார். ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேசிய விருது உட்பட முக்கிய விருதுகளை வென்றது. 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url