19 வருடங்களுக்குப் பிறகு இணைந்த சூர்யா, திரிஷா
அஜித்குமார் ஜோடியாக ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடிக்கும் திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இது தவிர, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘விஸ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘ராம்’, டொவினோ தாமஸ்சுடன் இணைந்து ‘ஜடென்டி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45வது படத்தில் சூர்யா-திரிஷா இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு இருவரும் 2002ல் அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’, 2005ல் ஹரி இயக்கிய ‘ஆறு’ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.