பிக் பாஸ் ரஞ்சித் நடிக்கும் ‘எஸ்பிஎம் 1 தி பாஸ்ட்’

 ரஞ்சித், காயத்ரி ரெமோ, மீசை ராஜேந்திரன், யாமினி, பிரேம் குமார், விஜயகுமார், ராஜ்குமார், சி.தேவநந்தன் ஆகியோர் நடித்துள்ள கிரைம் திரில்லர் ஆக்‌ஷன் படம், ‘எஸ்பிஎம் 1 தி பாஸ்ட்’. ட்ரீம் வேர்ட்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி சி.தேவநந்தன் இயக்கியுள்ளார். விஜயன், அண்ணாதுரை, டைட்டன் முருகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சோமன் சந்திரமதி எழுதிய பாடல்களுக்கு திவாகர் இசை அமைக்க, ஆரோன் பின்னணி இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. கிராமம் ஒன்றில் நடந்த கொலை பற்றி விசாரிக்கும்போது, அடுத்தடுத்த கொலைகள் குறித்த தகவல் வெளியாகி அதிர வைக்கிறது. கொலையாளி யார், அதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிப்பதே கதையாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url