TVK Conference: லட்சக்கணக்கான தொண்டர்கள்.. ஸ்தம்பித்த விக்கிரவாண்டி TVK மாநாடு!
நடிகர் விஜய் கடந்து 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் தன்னை மிகச்சிறந்த ஆளுமையாக தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடித்துவரும் ''தளபதி 69'' படத்துடன் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக இன்றைய தினம் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட விஜய்க்கு அதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஐம்பதாயிரம் தொண்டர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் காலை முதலில் மாநாடு நடந்த இடத்திற்கு வந்தனர். இதனால் வழி நெடுகிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் இந்த மாநாடு தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை ஏழு மணிக்குள் நடத்தி முடிக்க காவல்துறையினர் தவெகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெகு தொலைவில் இருந்து எல்லாம் தொண்டர்கள் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளதால் அவர்கள் வீடு போய் சேரும் வகையில் 7 மணிக்குள் இந்த மாநாட்டை முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மாநாட்டின் காரணமாக லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் சென்னை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல மணிநேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநாடு 4 மணிக்கு துவங்கவிருந்த நிலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே துவங்கப்பட்டது. ரசிகர்களிடையே ராம்ப் வாக் நடை பயின்ற விஜய், அவர்கள் கொடுத்த கட்சியின் துண்டுகளையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து குட்டிக் கதையுடன் அவர் பேசிய பேச்சு அனைவரையும் வசீகரிக்கும்வகையில் அமைந்திருந்தது.