OTT- க்கு வந்த டாப் ஸ்டார் பிரசாந்.... எப்போது தெரியுமா?
இந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
இந்த படத்தை டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தில், பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த பிரஷாந்த் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் ரீதியாக மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள அந்தகன் படம் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் அக்டோபர் 30 - ஆம் தேதி வெளியாகிறது.
அந்தகன் படத்தை தொடர்ந்து லப்பர் பந்து திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரிலும், சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது.