கலங்கி நின்ற சூர்யா! - தெலுங்கு கங்குவா பிரஸ் மீட்டில் சம்பவம்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் ''கங்குவா'' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது குறித்து நடந்த பிரஸ் மீட்டில் கண்கலங்கிய நிலையில் ரசிகர்களுடன் பேசினார்.
சமீபத்தில் நடந்த ''கங்குவா'' திரைப்பட தெலுங்கு பிரஸ் மீட்டில், ரசிகர்களுடன் மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தான் நடிப்பில் கடந்த இரண்டு அரை வருடங்களுக்காக எந்த ஒரு திரைப்படமும் தியேட்டரில் வெளியாகவில்லை எனவும், இருந்தபோதிலும் தனது ரசிகர்களாகிய நீங்கள், ''வாரணம் ஆயிரம்'' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ''சன் ஆஃப் கிருஷ்ணன்'' திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து கொண்டாடினீர்கள். அது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும், உங்கள் அன்பிற்கு நன்றி என கண்கலங்கியவாறு பேசினார்.
தமிழை போலவே நடிகர் சூர்யாவிற்கு தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.