சிம்பு தான் காரணம் - இயக்குனர் நெல்சன் பெருமிதம்!
தற்போதைய பிரபல இயக்குனரான நெல்சன், தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புக்கு சிம்பு தான் காரணம் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆன நெல்சன் ''கோலமாவு கோகிலா'', ''டாக்டர்'', ''ஜெயிலர்'' போன்ற படங்களை இயக்கியவர். இந்த நிலையில் தான் தயைபில் கவின் நடித்துள்ள, தீபாவளிக்கு வெளியாகும் ''பிளாடி பேக்கர்'' ப்ரோமஷனில் பிசியாக உள்ளார்.
இயக்குனர் நெல்சன், ''சிம்பு சார் எனக்கு ஸ்கூல் மேட்''. ரொம்ப வருஷம் கழிச்சி விஜய் டிவி ஷோ ஒன்றில் அவரை சந்தித்தேன். அப்போ அவர் வல்லவன் படத்துல நடிச்சிட்டு இருந்தாரு. படத்துல ஒர்க் பண்ண வரியான்னு என்ன கேட்டாரு. நான் இல்ல சார் முடியாதுனு இப்போ முடியாதுனு சொல்லிட்டேன். அதுல இருந்து எங்க நட்பு நீடிச்சது..அதுக்கு அப்றம் தான் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க ஆரம்பிச்சது, அதுக்கு காரணம் சிம்பு சார் தான் என செண்டிமெண்ட் ஆக கூறிருக்கிறார்.