எல்லா அவர்தான் காரணம் - பெருமையுடன் நடிகை நிகிலா விமல்
நிகிலா விமல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவ்வப்போது தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார். ''வாழை'' திரைப்படத்தால் தனக்கு கிடைத்த பாராட்டை பற்றி பேசியுள்ளார்.
வாழை (Vaazhai) 2024-இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் நடிகை நிகிலா விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜே. சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி, நிவேதிதா இராஜப்பன் ஆகியோரும் நடித்திருந்தனர். நிகிலா விமலின் நடிப்பும் பெரிதாக வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் அவர் சமீபத்தில் படம் ஹிட் ஆனதற்காக தான் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
''வாழை'' திரைப்படத்தில் நடித்தது ரொம்பவும் நல்ல விஷயம். என்னை அப்படி வழிநடத்தியது இயக்குநர் மாரி செல்வராஜ் சார். நடிப்புக்கான அளவு கூடவோ, குறைந்தோ போய்விடாமல் பார்த்துக்கொண்டது அவர்தான். மக்களின் பாராட்டு பெறுகிற ஒவ்வோர் இடமும் அவர் செதுக்கியது. நான் வெறும் ஒரு கருவிதான் என பெருமிதத்துடன் நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.