இணையும் சிம்பு - த்ரிஷா கூட்டணி - பாடல் காட்சி ஷூட்டிங்
நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் என பலர் நடித்துள்ளனர். இதில் கமல்ஹாசனுக்கு இரண்டு தோற்றம் என்றும் அவரின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு நவ.2-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. சிம்பு, த்ரிஷா பங்குபெறும் இந்தப் பாடல் காட்சி படப்பிடிப்பு 7 நாட்கள் நடக்கிறது. அதை முடித்துவிட்டு கோவாவில் ஒருநாள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.