சிம்புவிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.. யார் தெரியுமா??

 தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. மணி ரத்னம் இயக்கி வரும் இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சிம்பு நடித்து வருகிறார்.


மேலும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தக் லைஃப் படத்திற்கு முன் சிம்பு கமிட்டான திரைப்படம் STR 48.

வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதால் ரசிகர்கள் சற்று வருத்தமடைந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக சூப்பர் அப்டேட் ஒன்றை சிம்பு வெளியிட்டார்.

தன்னுடைய வின்டேஜ் ஸ்டைலில் ஒரு படம் நடிக்க போவதாக அறிவித்தார். மேலும் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை யார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோட் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்த நடிகை மீனாட்சி சவுத்ரி தான் என கூறப்படுகிறது.

இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url