நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம்! - நெகிழ்ச்சியில் நயன்...
நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், "நானும் ரவுடி தான்" படம் தனது திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் மாற்றியதாக கூறியுள்ளார். அவருடைய இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
"என் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வந்த படம் இதுதான். 9 வருடங்களுக்கு முன் ‘நானும் ரௌடிதான்’ ரிலீஸானது. மக்களிடமிருந்து புதிய அன்பைப் பெற்றேன். எப்போதும் இதை நான் மறக்கமாட்டேன். இந்த படத்தால் ஒரு நடிகையாக புதிய பாடங்களையும் அனுபவங்களையும், புதிய நினைவுகளையும் பெற்றேன்.
இப்போதும் முன்னணி நடிகையாக நயன்தாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.