மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்



ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி மீது உடற்கல்வி ஆசிரியர் சரமாரி தாக்குதல் நடத்தினார்.


மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா வில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தியாகராஜன் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url