விஜய் சொன்ன காரணம்! தவெக கொள்கை பாடலை எழுதிய அறிவு
தமிழக வெற்றிக் கழக கொள்கை பாடலை தெருக்குரல் அறிவு இயற்றிய நிலையில், அப்பாடல் எழுத தனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக கொள்கை பாடல் எழுதுவதற்கு விஜய் எதற்காக தன்னை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் சமூகம் சார்ந்த விஷயங்களை தனது பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.