''தேவாரா'' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த ''தேவாரா பார்ட் 1'' திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


தவாரா' பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் செப்டம்பர் 27 அன்று தியேட்டரில் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், பாலிவுட் ஸ்டார் சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

குறிப்பாக தெலுங்கில் தேவார படம் அதிக வசூலை அள்ளியது. அந்த வகையில் 'தேவாரா' வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு வசூல் பெரிதாக வரவில்லை என்றாலும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ. 209 கோடி வசூலை பெற்றது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியானது. இப்படம், ''நவம்பர் 8''-ஆம் தேதி Netflix ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேவாரா படம், 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url