ஓடிடியில் ஹிட்டான ‘மெய்யழகன்’ லாபம் என்ன? - சூர்யா

 ‘மெய்யழகன்’ படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் சூர்யா பதிலளித்துள்ளார். 

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘மெய்யழகன்’ படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் இணையத்தில் உலா வந்தன. இந்தநிலையில், படக்குழுவினர் இது தொடர்பாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார்கள். தற்போது ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றி, வசூல் நிலவரம் குறித்து பேட்டியொன்றில் சூர்யா பேசியிருக்கிறார்.

அதில், “‘மெய்யழகன்’ படத்தை தயாரித்தை பெருமையாக கருதுகிறேன். படத்தின் வசூல் என்ன என்பதை பேசுவது தேவையில்லை என நினைக்கிறேன். அந்தப் படம் 25% வரை லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. 10% லாபம் கிடைக்கும் என தயாரித்த படம் எனக்கு 25% லாபம் கொடுத்தது. ஒரு படம் எவ்வளவு லாபம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.

கலாச்சாரம், வாழ்க்கை முறை, நெறிமுறைகள் என அனைத்தையும் பேசிய படம் அது. சமீபத்திய படங்களில் இவை அனைத்தையும் பேசிய ஒரே படம் ‘மெய்யழகன்’ தான். அதனாலேயே அது மிகவும் முக்கியமான படமாக பார்க்கிறேன். ஆகையால் அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url