பேய் படமா? திரில்லர் படமா? பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்..
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்திய நடிகராக மாறி உள்ள நிலையில், அவர் தற்போது சில பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் பட்ஜெட் மட்டும் 2000 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று "ராஜா சாப்". இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபாஸ் ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கும் இந்த படத்தில், நிதி அகர்வால், ரித்திக் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மாருதி இயக்கத்தில், தமன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது, இந்த படம் ஒரு செம திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.