அலியா பட்-டிற்க்கா இந்த நிலைமை? சோகத்தில் ரசிகர்கள்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான இவர் மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்.
பாலிவுட்டின் முக்கிய நடிகையான ஆலியா பட் நடிப்பில், கடந்த பத்து வருடங்களில் இப்படி ஒரு தோல்விப் படம் வந்ததில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ராசியான மற்றும் வெற்றி நாயகியாக இதுவரை பாலிவுட்டில் வலம்வந்த நடிகை ஆலியா பட், இதனால் வருத்தத்தில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருடன் இப்படத்தில் வேதாங் ரெய்னா, மனோஜ் பஹ்வா, ஹர்ஷ் ஏ. சிங் போன்றோர் நடித்திருந்தனர்.
தற்போது ஆலியா பட் ''ஆல்பா'' எனும் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் 2025ல் வெளியாகும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.