பிரியா பவானி சங்கரின் க்ரஷ்
‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர் சமீபத்தில் கலந்துக்கொண்ட பேட்டி ஒன்றில் “இவர் தான் என் க்ரஷ்” என்று கூறியது இளம் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் எனத் தொடர்ந்து படங்கள் கொடுக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு மட்டும் திரும்பும் இடமெல்லாம் இவர் படங்கள்தான் இருந்தன.
அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை, கல்யாணம் கமனீயம் (தெலுங்கு) என சென்ற ஆண்டு மட்டும் நிறைய படங்களில் நடித்தார். அதேபோல் இந்த ஆண்டு ரத்னம், ஜீப்ரா (தெலுங்கு), பீமா, டிமான்டிக் காலனி 2, இந்தியன் 2 என வரிசையாகப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடங்கிய முதல் இன்னும் அவர் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் ஆண்டு இறுதிக்குள் தொடர்ந்துப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படங்களில் பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் சென்னையில் ஒரு ரெஸ்டாரன்ட்டையும் திறந்திருக்கிறார். 'லியாம்ஸ் டைனர்' என்று பெயரிடப்பட்ட இந்த ஹோட்டலை தனது காதலனுக்காகத் திறந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் கல்லூரியிலிருந்தே ராஜகோபால் என்பவரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் க்ரஷ் யார் என்று பிரியா பவானி சங்கரிடம் கேள்வி கேட்டனர். அப்போது அவர் எனது க்ரஷ் 'விக்கி கௌஷல்' என்று கூறினார். விக்கி கௌஷல் கத்ரீனா கைஃபின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த நான்கு வருடங்களாக விக்கி கௌஷல்தான் எனது க்ரஷ் என்று பிரியா கூறியது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.