தொடர்ந்து புறக்கணிக்கும் சாய் பல்லவி - நேர்காணலில் தகவல்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, நேர்காணலில் தான் தொடர்ந்து PR ஏஜென்சிகளை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தனக்காகவே தனி ரசிகர்களை கொண்ட நடிகையான சாய் பல்லவி, முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். ''ப்ரேமம்'' படம் மூலம் பிரபலமான இவர் அதை தொடர்ந்து, காளி (2016), மிடில் கிளாஸ் அப்பாயி (2017), மாரி 2 (2018), அதிரன் (2019), நெட்ஃபிக்ஸ் ஆந்தாலஜி படமான பாவ கதைகள் (2020), லவ் ஸ்டோரி (2021), ஷியாம் ஆகிய படங்களில் அவர் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். சிங்கா ராய் (2021), விரத பர்வம் (2022) மற்றும் கார்கி (2022). லவ் ஸ்டோரி மற்றும் கார்கி ஆகிய படங்களில் மேலும் பாராட்டுகளை பெற்றார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் ''அமரன்'' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரானார் கோபிநாத்தின் நேர்காணலில் பங்குபெற்ற சாய் பல்லவி, தான் PR ஏஜென்சிகளை பயன்படுத்துவது இல்லை எனவும் மேலும் சிலர் என்னை தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.