இதுவே முதல்முறை..! அமரன் படைத்த சாதனை - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ''அமரன்'' திரைப்படம் திரையில் வெளியாகவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான இப்படம் ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகியிருக்கின்றது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழகத்தை சேர்ந்த முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார். அதற்காக அவர் தன்னை டோட்டலாக மாற்றியிருக்கிறார். இதுவரை சிவகார்த்திகேயன் காமெடியான படங்களிலும் கமர்ஷியல் படங்களில் மட்டுமே தான் நடித்து வந்தார். முதல் முறையான அமரன் போன்ற முழுக்க முழுக்க சீரியஸான ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும், அண்டைமாநிலங்களிலும் இப்படத்திற்கான முன்பதிவு அமோகமாக இருக்கின்றது. இதுவரை கிட்டத்தட்ட ஐந்து கோடி வரை இப்படத்திற்கு முன்பதிவு ஆகியிருக்கிறது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இப்படத்தின் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் அதிக ஓப்பனிங் கொண்ட படமாக அமரன் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. முதல் நாள் வசூலில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் புது உயரத்தை அடைய இருக்கின்றார். இந்நிலையில் அமரன் திரைப்படத்தை சில ராணுவ அதிகாரிகள் பார்த்துள்ளனர். படம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாம் இதனால் சிவகார்திகேயன் மகிழ்ச்சியில் உள்ளாராம்.