நானும் சென்னை பொண்ணு தாங்க - நித்யா மேனன்
சமீபத்தில் ''திருச்சிற்றம்பலம்'' படத்திற்காக தேசிய விருது வாங்கிய நித்யா மேனன், சென்னை மற்றும் தமிழை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
நித்யா மேனன் பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் ''குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி'' மற்றும் ''மல்லி மல்லி இடி ராணி ரோஜு'' ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார். மேலும், பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர், ''எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் சென்னை. சரளமா பேசுறது தமிழ்தான். எங்க அப்பா தமிழ்வழியில்தான் படிச்சிருக்காங்க. அம்மாவும் தமிழ் ரொம்ப நல்லா பேசுவாங்க. சின்ன வயசுல இருந்து, நான் தமிழ்தான் கேட்டு வளர்ந்திருக்கேன்''. வீட்டுலேயும் தமிழ்லதான் பேசிப்போம். சென்னையில் இருந்து யாராவது பேசினால், ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா'ன்னு ஆச்சரியமா கேட்கும்போது, எனக்கு முகம் வாடிடும் என தெரிவித்துள்ளார்.