இரட்டை அர்த்த பாடலும்.. இயக்குனர் விளக்கமும்..
சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவான "ஜாலியோ ஜிம்கானா" என்ற திரைப்படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில், இந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து இயக்குநர் சக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். "பாடல் நல்ல ஹிட், ஒரு மில்லியன் டச் செய்வது நிச்சயம். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறார்கள். ஒரு பெண், தனக்கு வரப் போகும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது தான் இந்த பாடல். இதில் டபுள் மீனிங் இருக்கிறது என்று சொல்வதைக் குறித்து நான் கவலைப்படவில்லை; பாடல் ஹிட் அவ்வளவுதான்," என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், "பாடல் நன்றாக இருந்தால் அதை அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது" என்றும் கூறியுள்ளார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள '‘ஜாலியோ ஜிம்கானா" திரைப்படத்தில் அபிராமி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.