பணம் அனுப்பி புதிய மோசடி: போலீசார் எச்சரிக்கை
ஆன்லைனில் பணத்தை மோசடி செய்யும் சைபர் கிரைம்கள் தற்போது புதிய யுக்திகளை பின்பற்றி வருகின்றனர். "கூகுள் பே" மூலம் பொது மக்களுக்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை பரிமாற்றம் செய்கின்றனர்.
பணத்தை அனுப்பியவரை தொடர்பு கொண்டு, ஊனமுற்ற குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். உங்களுக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன்.
அந்த பணத்தை நான் கூறும், மொபைல் எண்ணிற்கு அனுப்புங்கள் அல்லது 'கியூ.ஆர்., கோடு' அனுப்புகிறேன். அதை, 'ஸ்கேன்' செய்து அனுப்புங்கள் என்று கூறுகின்றனர்.
அவர்களிடம், நான் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து விடுகிறேன். உங்களுக்கு என்னால் அனுப்ப முடியாது என்று கூறி விடுங்கள். இத்தகைய சைபர் குற்றவாளிகள், உங்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை திருடி, பணத்தை மோசடி செய்ய முயற்சிக்கின்றனர்.
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மோசடி முயற்சி குறித்து, கட்டணமில்லா, 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளியுங்கள்.
இவ்வாறு போலீசார் கூறினர்.